மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் வரைவு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு - அறிவிக்கை

தமிழ்நாடு, 2016ஆம் ஆண்டு, (மத்தியச் சட்டம் 49/2016) மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் 101ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (2)உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மாநில அரசு உருவாக்கக் கருதியுள்ள, 2018ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் பின்வரும் வரைவு, இதனால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.

 1. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து, பதினைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது.
 2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு முடிவடைவதற்கு முன்னர், மேற்சொன்ன வரைவு விதிகள் தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறுகின்ற அனைத்து மறுப்புரைகளையும் கருத்துரைகளையும் மாநில அரசு உரியவாறு பரிசீலிக்கும்.
 3. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின், 28.02.2018 அன்று அல்லது அதற்கு முன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், எண்.5, காமராஜர் சாலை, லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ scd.tn@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

பொருளடக்கம்

 1. குறுந்தலைப்பு
 2. பொருள் விளக்கங்கள்
 3. நிறுவனத்தில் ஏலாமையின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது
 4. ஏலாமை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு
 5. வரையறுக்கப்பட்ட காப்பாளர்கள்
 6. உயரளவு ஆதரவு தேவைபடுகிற மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு வழிவகை செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு
 7. மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான தகுதி வாய்ந்த அதிகாரி மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கான மானியங்கள்
 8. பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல்
 9. மேல்முறையீடு
 10. குறிப்பிட்ட ஏலாமைகள் குறித்து ஏலாமைச் சான்றிதழை வழங்குகிற அதிகாரம்
 11. சான்றளிப்பு அதிகார மன்றத்தின் முடிவிற்கு எதிரான மேல்முறையீடு
 12. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவிற்கான மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள்
 13. மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான படிகள்
 14. கூட்டங்கள் பற்றிய அறிவிப்பு
 15. கூட்டக் குறைவெண் வரம்பு
 16. கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு
 17. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு
 18. மாநில ஆணையரின் சம்பளம் மற்றும் படிகள்
 19. மாநில ஆணையரின் பணிகளுக்கான ஏனைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்
 20. மாநில ஆணையருக்கு உதவும் ஆலோசனைக்குழு
 21. புகார்களை தீர்வு செய்வதற்கு மாநில ஆணையர் பின்பற்ற வேண்டிய நடைமுறை
 22. மாநில ஆணையரின் ஆண்டு மற்றும் சிறப்பு அறிக்கைகள்
 23. சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர்
 24. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நிதியமும் அதனை நிருவகித்தலும்
 25. மாநில நிதியத்தின் பயன்பாடுகள்
 26. அட்டவணை – I
 27. படிவம் – I
 28. படிவம் – II
 29. படிவம் – III
 30. படிவம் – IV
 31. படிவம் – V
 32. அட்டவணை – II
 33. அட்டவணை – I
 34. அட்டவணை – II

1. குறுந்தலைப்பு

இந்த விதிகள், தமிழ்நாடு, 2018ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகள் என அழைக்கப்படும்

2. பொருள் விளக்கங்கள்

3. நிறுவனத்தில் ஏலாமையின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது

4. ஏலாமை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு

5. வரையறுக்கப்பட்ட காப்பாளர்கள்

6. உயரளவு ஆதரவு தேவைபடுகிற மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு வழிவகை செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு

7. மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான தகுதி வாய்ந்த அதிகாரி மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கான மானியங்கள்

8. பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல்

9. மேல்முறையீடு

10. குறிப்பிட்ட ஏலாமைகள் குறித்து ஏலாமைச் சான்றிதழை வழங்குகிற அதிகாரம்

11. சான்றளிப்பு அதிகார மன்றத்தின் முடிவிற்கு எதிரான மேல்முறையீடு

12. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவிற்கான மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள்

13. மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான படிகள்

14. கூட்டங்கள் பற்றிய அறிவிப்பு

15. கூட்டக் குறைவெண் வரம்பு

16. கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு

17. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு

18. மாநில ஆணையரின் சம்பளம் மற்றும் படிகள்

19. மாநில ஆணையரின் பணிகளுக்கான ஏனைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்

20. மாநில ஆணையருக்கு உதவும் ஆலோசனைக்குழு

21. புகார்களை தீர்வு செய்வதற்கு மாநில ஆணையர் பின்பற்ற வேண்டிய நடைமுறை

22. மாநில ஆணையரின் ஆண்டு மற்றும் சிறப்பு அறிக்கைகள்

23. சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர்

24. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நிதியமும் அதனை நிருவகித்தலும்

25. மாநில நிதியத்தின் பயன்பாடுகள்

அட்டவணை – I

படிவம் – I

[5(2)(i) மற்றும் (ii) ஆம் விதிகளைக் காண்க]

வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிப்பதற்காக, மாற்றுத்திறனாளி, அவரது பெற்றோர், உறவினர் அல்லது பதிவுப்பெற்ற ஒரு நிறுவனம், நியமன அதிகாரிக்கு அளிக்கும் விண்ணப்ப படிவம்


அனுப்புநர்:


நாள்:
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் (நியமன அதிகாரி)

ஐயா / அம்மையீர், _________________ என்கிற மாற்றுத்திறனாளி நபருக்கு _________________ தொடர்பாக, சட்டப்படியாக கட்டுப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட காப்பாளர் இவருக்குத் தேவைப்படுகிறார். _________________ நோக்கத்திற்காக, _________________ கால அளவிற்கு, மேற்சொன்ன _________________ என்பவருக்கு _________________ என்பவரை வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ரு நான் / நாங்கள் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன் / கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மேற்கொண்டும் விவரங்களை கீழே அளித்துள்ளோம், விரைவில் முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. மாற்றுத்திறனாளியின் விவரங்கள்
1. மாற்றுத்திறனாளியின் பெயர்:  
2. முழு அஞ்சலக முகவரி:  
3. வயது:  
4. ஆண் / பெண்:  
5. ஏலாமையின் வகைப்பாடு மற்றும் ஏலாமையின் சதவீதம்:
(நகல் இணைக்கப்பட வேண்டும்)
 
6. அடையாள அட்டை எண் / மற்றுத்திறனாளிகள் தனி அடையாள அட்டை எண்:
(நகல் இணைக்கப்பட வேண்டும்)
 
7. ஆதார் அட்டை எண்:
(நகல் இணைக்கப்பட வேண்டும்)
 
8. தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்:  

3. வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட கருதப்பட்டுள்ள நபர்கள் அல்லது பதிவுப்பெற்ற நிறுவனத்தின் விவரங்கள்
1. காப்பாளரின் பெயர்:  
2. முழு அஞ்சலக முகவரி:  
3. வயது:  
4. ஆண் / பெண்:  
5. மாற்றுத்திறனாளியுடனான உறவுமுறை:  
6. பதிவுப்பெற்ற நிறுவனத்தைப் பொருத்தமட்டில் பதிவு விவரங்கள்:  
7. தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்:  
8. தொடர்பு கொள்வதற்கான கைப்பேசி எண்:  
9. வரையறுக்கப்பட்ட காப்பாளர் தேவைப்படுவதற்கான நோக்கம்: (ஆவணங்கள் ஏதேனுமிருப்பின் இணைக்கவும்)  
10. வரையறுக்கப்பட்ட காப்பாளரின் ஆதரவு தேவைப்படுகிற காலஅளவு:  
11. வரையறுக்கப்பட்ட காப்பாளருக்கு ஏதேனும் உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பின் அதன் நிலை குறித்த விவரங்கள்:
(தயவுசெய்து விவரிக்கவும்)
 


வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமனம் செய்வதற்கு கருதப்பட்ட நபரின் ஒப்புதல் நியமன அதிகாரிக்கு அளிக்கும் விண்ணப்ப படிவம்


வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்படவுள்ள ________________ எனும் நான் / நாங்கள் ___________________ கால அளவிற்கு எனது / எங்களது கடமைகளை ஊக்கத்துடன் நிறைவேற்றுவேன் / நிறைவேற்றுவோம் என இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன் / ஒப்புக்கொள்கிறோம்.விண்ணப்பதாரரின் / மாற்றுத்திறனாளியின் கையொப்பம்


நியமனம் செய்யக் கருதப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட காப்பாளரின் கையொப்பம்

படிவம் – II

[5(2)(vii) ஆம் விதியைக் காண்க]

(1)மாற்றுத்திறனாளி (2) பதிவுப்பெற்ற நிறுவனம், அல்லது (3) மாற்றுத்திறன் கொண்ட நபரின் பெற்றோர் அல்லது உறவினரால் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்க உறுதிசெய்யும் படிவம்


_____________ என்பவர் அளித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்துள்ள _______________ மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியராகிய திரு / திருமதி ________________ ஆகிய நான், ________________ தொடர்பாக, சட்ட ரீதியாக கட்டுப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதற்காக ____________________ என்பவரை ___________________ என்பவருக்கு (மாற்றுத்திறனாளியின் பெயர்) __________________ கால அளவிற்கு வரையறுக்கப்பட்ட காப்பாளராக இதனால் நியமிக்கிறேன். வரையறுக்கப்பட்ட காப்பாளரின் கடப்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டவாறு இருக்கும்.

 

மாற்றுத்திறனாளி மற்றும் வரையறுக்கப்பட்ட காப்பாளர் இணைந்து இருக்கும் புகைப்படம்


இடம்:


நியமன அதிகாரியின் கையொப்பம்


நாள்:
 

படிவம் – III

( 8 (1) மற்றும் (4) ) ஆம் விதிகளைக் காண்க)

3. வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட கருதப்பட்டுள்ள நபர்கள் அல்லது பதிவுப்பெற்ற நிறுவனத்தின் விவரங்கள்
1. அமைப்பு/நிறுவனத்தின் பெயர்:  
2. நிருவாக அலுவலகம்: அமைப்பின் /நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி:  
3. நிறுவனம் அமைந்துள்ள இடம்: அமைப்பின்/நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி:  
4. விண்ணப்பதாரர்,
 • தமிழ்நாடு 1975 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 27/1975) கீழ் பதிவு செய்த ஓர் அமைப்பு ஆகும்
 • தற்போது செயலில் உள்ள யாதொரு சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒரு பொது அறக்கட்டளை ஆகும்
 • இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அதன் கிளைகள்
 • 1956 ஆம் ஆண்டு முன்னாள் நிறுவனங்கள் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்த ஒரு நிறுவனம் (மத்தியச் சட்டம் 1/1956) ஆகும்
 • இந்தத் திட்டத்தின் செயல் நோக்கத்திற்காக, அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் பெயருடன் பதிவு பற்றிய விவரங்கள்) ஏனைய யாதொரு அமைப்பு (சட்டத்தின் பெயருடன் பதிவு பற்றிய விவரங்கள்) (நகல் இணைக்கப்பட வேண்டும்)
 
5. அமைப்பு/நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நாள்:  
6. அமைப்பு/நிறுவனத்தின் சுருக்க வரலாறு மற்றும் அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்:  
7. அமைப்பு/நிறுவனத்தால் அளிக்கப்படும் சேவைகளின் வகை ( குறிப்பிட்ட ஏலாமையைக் குறிப்பிடவும்.:  
8. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு இருந்தால், விவரங்களை அளிக்கவும்:  
9. இந்தச் சட்டத்தின் 51(2) ஆம் பிரிவு அல்லது 1995 ஆம் ஆண்டு ஏலாமையுற்றோர் ( சம வாய்ப்புகள், உரிமைப் பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்கெடுப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1996) கீழ் அளிக்கப்பட்ட முந்தைய பதிவுச் சான்றிதழின் நகல்  
10. சொந்தமான இடத்தில் அல்லது வாடகைக் கட்டடத்தில் அமைந்துள்ளதா? அவ்வாறு அமைந்துள்ளதெனில், முகவரி விவரங்கள்:
(வாடகைக் கட்டடத்தில் வாடகை ஒப்பந்த நகலை இணைக்கவும்):
 
11. ஏலாமையுற்ற பயனாளிகளின் தற்போதைய எண்ணிக்கை:
(தொடர் எண், பெயர், முகவரி, வயது, பாலினம், மற்றும் குறிப்பிட்ட ஏலாமையின் வகை, ஏலாமையின் சதவீதம் மற்றும் அடையாள அட்டை / இந்திய அதிகார அமைப்பின் தனித்துவமான அடையாள அட்டை எண்)
 
12. கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
 1. வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கட்டட உரிமம்
 2. பொதுப்பணித் துறையின் பொறியாளரிடமிருந்து/ வாடகைக்கு அமர்த்தப்பட்ட பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டட அமைப்பின் உறுதித் தன்மைக்கான சான்றிதழ்
 3. தகுதிவாய்ந்த பொறியாளரால் வரையப்பட்ட கட்டடத்தின் திட்டவரைபடம்
 4. மாவட்ட சுகாதார அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்றிதழ்
 5. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்
 
13. திட்டத்தை மேற்கொள்வதற்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஏனைய பொருத்தமான வசதிகள் உள்ளனவா? அவ்வாறு இருந்தால், விவரங்களை அளிக்கவும்
புதியதாக பணியாளர்களை நியமிக்கும் நேர்வில், இந்த நோக்கத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள், கல்வி, தொழில்முறை மற்றும் அனுபவம் குறித்த விவரங்களை அளிக்கவும்.
இந்த நிறுவனத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் எண்ணிக்கை – அவர்கள் முழு நேரத் தொழிலாளர்களா அல்லது பகுதி நேரத் தொழிலாளர்களா? (இந்திய மறுவாழ்வு குழுவால் அங்கீகரிக்கப்பட்டது)
இணைக்கப்பட வேண்டிய தாள்கள் /அறிக்கைகளின் பட்டியல்
 1. நிறுவனத்தை அமைத்தல்
 2. குறிப்பிட்ட ஒவ்வொரு உறுப்பினருடன் மேலாண்மை வாரியத்தை அமைத்தல்
 3. தற்போது கிடைக்கிற ஆண்டு அறிக்கை
 4. நிறுவனம் முழுவதற்குமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்காக பட்டயக் கணக்கர் ஒருவரால் அல்லது அரசு தணிக்கையாளரால் முறையாக தணிக்கை செய்யப்பட்ட வருவாய் மற்றும் செலவினக் கணக்குகள் மற்றும் வரவுகள் மற்றும் தொகை செலுத்தியதற்கான கணக்குகள். (நிறுவனம் முழுவதற்குமாக, முந்தைய நிதியாண்டிலிருந்து சான்றளிக்கப்பட்ட ஐந்தொகை கணக்கு விவரத்தாளின் நகலுடன்)
 5. மத்திய/மாநில அரசிடமிருந்து, கடந்த ஐந்தாண்டுகளாகப், பெறப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்களை அளிக்கிற அறிக்கை (ஆண்டு, நோக்கம், தொகை முதலியவை) ஒன்று. இதில், பரிசீலிக்கப்பட்டு வருகிற திட்டங்களுக்கான அல்லது ஏனைய பிற திட்டத்திற்காக, அந்த நிறுவனங்களுள் ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் அல்லது ஏனைய பிற நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகளும் அடங்கும்.
 6. திட்டம் தொடர்பான தொடரினச் செலவு மற்றும் தொடராச் செலவினம் குறித்த இனங்கள் வாரியான, ஆண்டு வாரியான விவரங்களை அளிக்கும் அறிக்கை ஒன்று
 7. ஏற்கெனவே இருக்கக்கூடிய சாதனங்கள், உபகரணங்கள், அறைக்கலன்கள், நூலக புத்தகங்கள் முதலியவற்றைக் ( இவற்றில் எது சாத்தியமோ, அவற்றின் எண்ணிக்கை விவரங்கள்) குறிப்பிடுகிற விவர அறிக்கை ஒன்று மற்றும் அரசிடமிருந்து பெற்ற நிதியுதவியுடன், ஆண்டு வாரியாகக் கொள்முதல் செய்யப்பட்ட மேற்சொன்ன இனங்களைக் குறிக்கிற தனியான விவர அறிக்கை
 8. கோரப்பட்ட நிதிக்காக அந்த ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட வரவுகள் மற்றும் செலவினத்தைக் காட்டுகிற நிறுவனம் முழுவதற்குமான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டு விவரங்கள்
 
14. நிறுவனத்தில் உள்ள தடையற்ற வசதிகளின் விவரங்கள்:  
15. பொழுதுபோக்கு/விளையாட்டு வசதிகள்:  
16. அதிக அளவில் ஆதரவு தேவைப்படுகிற ஏலாமையுற்ற குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் உதவியாளர் வசதிகள்:  
17. கூடுதல் தாள்களின் பட்டியல், ஏதேனுமிருப்பின்:  
18. கூடுதல் தகவல் பட்டியல், ஏதேனுமிருப்பின்:  


நாள்:


கையொப்பம்


இடம்:


விண்ணப்பதாரரின் பெயர்

படிவம் – IV

[8(2)ஆம் விதியைக் காண்க]

பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகளும் தர நிலைகளும்

  1. வட்டாட்சியரிடமிருந்து கட்டட உரிமம்
  2. பொதுப்பணித்துறை பொறியாளர்/பட்டயப் பொறியாளரிடமிருந்து கட்டட அமைப்பு உறுதித் தன்மை சான்றிதழ்
  3. தகுதி வாய்ந்த பொறியாளரால் வரையப்பட்ட கட்டட வரைபடத்தின் திட்ட வரைபடம்
  4. மாவட்ட சுகாதார அலுவலரிடமிருந்து துப்புரவுச் சான்றிதழ்
  5. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ்
 1. கட்டடத்திற்கான உரிமை அல்லது கட்டடத்திற்கான செல்திறனுள்ள வாடகை ஒப்பந்தம்
 2. பதிவு கோரும் அமைப்பால் கையாளப்படும் மாற்றுத் திறன் வகைகளுக்கான, பொருந்தத்தக்க தடையற்ற வசதிகள்
 3. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் வழிகாட்டிகுறிப்புகளில் வரையறுக்கப்பட்டவாறான பயிற்சி பெற்ற பணியாளர்கள் போதுமான அளவில் இருத்தல்.
 4. தெரிவிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, போதுமான அறைகலன், கற்பித்தலுக்கான சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் இருத்தல்.

படிவம் – V

[8(3)ஆம் விதியைக் காண்க]

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம்,
சீமாட்டி வெல்லிங்டன் கல்லூரி வளாகம், காமராசர் சாலை,
சென்னை – 600 005.

பதிவு/புதுப்பித்தல் சான்றிதழ்
(மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் செயல்முறை ஆணைகள்)
செயல்முறை ஆணை எண்.நாள்:

குடியிருப்பு/குடியிருப்பு சாராத ----------- நடத்துவதற்கு 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 51(2) பிரிவின் கீழ் (மத்திய சட்டம் 49/2016) மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் நிறுவனமான (காண்க தொடர் எண்.----------------) ------------------க்கு பதிவு செய்யப்படுகிறது/பதிவு புதுப்பிக்கப்படுகிறது. இந்தப் பதிவு சான்றிதழ் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு -----------------லிருந்து ----------------- வரையிலான கால அளவிற்கு செல்திறன் உள்ளதாக இருக்கும்:-

 1. பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், பதிவுச் சான்றிதழின் செல்திறன் கால அளவு முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.
 2. சான்றிதழ் இரத்து செய்யப்பட்ட அல்லது தீயொழுக்கம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட யாதொரு பணியாளரையும் நிருவாகம் நியமிக்கக் கூடாது.
 3. மாநில அரசு மானியம் தற்போது அளிக்கப்பட மாட்டாது.
 4. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு போதுமான இடவசதி உட்பட உரிய உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவனம் வழங்க வேண்டும்.
 5. கட்டட உரிமம் முறையாக குறித்த காலத்திற்கொருமுறை புதுப்பிக்க வேண்டும்.
 6. 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 34(1)ஆம் பிரிவின்படி, அடிப்படை நிபந்தனைகளுடன் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான, ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த பணியிடங்களில் உள்ள பதவித்தர எண்ணிக்கையிலுள்ள காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கு விழுக்காடுக்கு குறையாத பணியாளர்களை நிருவாகம் பணியமர்த்த வேண்டும்.
 7. மழை நீர் சேகரிப்பு வசதிகள், நிறுவனத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
 8. இந்தச் சான்றிதழ், எளிதில் அனைவரும் காணக்கூடிய இடத்தில், நிறுவனத்தால், காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
 9. நிறுவனத்தின் பெயர் பலகையில் பின்வரும் சொற்றொடர்கள் குறிப்பிடப்பட வேண்டும்-
  '2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 51(2)ஆம் பிரிவின் கீழ், -----------------லிருந்து ----------------- வரையிலான கால அளவிற்கு, ----------- தற்காலிமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.'
 10. அவ்வப்போது, மாநில ஆணையர் வழங்கும் விதிகள்/ஒழுங்கு முறைவிதிகளை, நிறுவனம் பின்பற்ற வேண்டும்.
 11. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் குறிப்பிடப்பட்டவாறாக உரிய அளவில், தேவையான தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளை முறையாக நிறுவப்பட வேண்டும்.
 12. கட்டட அமைப்பு குறித்த உறுதித்தன்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டட உரிமம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து பெறப்படும் தடையில்லா சான்றிதழ் குறித்த காலத்திற்கொருமுறை தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்.
 13. சட்டம்/விதிகளின் கீழுள்ள ஆய்வு அதிகாரிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்/அலுவலர்களால் ஆய்வு செய்வதற்கு நிறுவனம் உட்பட்டதாகும்.
 14. 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 52ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள விதித்துறைகளின்படி, பதிவுச் சான்றிதழ் இரத்து செய்வதற்கு உட்பட்டதாகும்.

இப்பதிவானது, 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். அவ்வப்போது, மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரால் அளிக்கப்படும் விதிகள்/ஒழுங்குமுறை விதிகள்/அமைப்புகளுக்கு, நிறுவனம் இணங்கி நடக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
பெறுநர்:
(அரசு சாரா அமைப்பு/பள்ளியின் பெயர் மற்றும் முகவரி)


நகல் பெறுவோர்:

 1. மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர், -------- மாவட்டம்.
 2. இருப்பு கோப்பு / உதிரி

அட்டவணை – II

[10(1) மற்றும் (3)ஆம் விதியைக் காண்க]

மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் சான்றளிக்கும் அதிகாரிகளின் பட்டியல்

அட்டவணை – I

குறிப்பிட்ட ஏலாமை ஏலாமை சான்றிதழ் வழங்கும் நோக்கத்திற்கான மருத்துவ அதிகார அமைப்பு ஏலாமை சான்றிதழ் வழங்கும் சான்றளிக்கும் அதிகாரி
1. உடலுறுப்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் மட்டுமே நடமாட இயலாமை அல்லது முழுமையாக, நிரந்தரமாக உடலுறுப்பு இயங்காமை மற்றும் பார்வையின்மை அரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள்/நிறுவனங்கள்/ஆரம்ப சுகாதார மையங்கள் அரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள்/நிறுவனங்கள்/ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் யாதொரு மருத்துவர்/மருத்துவத் தொழிலர்
2. பல வகையான ஏலாமை தொடர்புடைய மருத்துவ வல்லுநர் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் அரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மாவட்ட மருத்துவமனை / பிற மருத்துவமனைகள் / நிறுவனங்கள் தொடர்புடைய ஏலாமையை குணமாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழு
3. மேற்சொன்ன தொடர் எண் 1 & 2ல் குறிப்பிடப்படாத, குறிப்பிட்ட ஏலாமைகள் அரசு/சட்டப்படியான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள் /ஆரம்ப சுகாதார மையங்கள்/நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை – II ல் குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஏலாமையை குணமாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர்

அட்டவணை – II

வகை வல்லுநர்
1. பெருமூளை வாதம் இயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு எலும்பியல் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவம்/நரம்பியல் மருத்துவர் அல்லது உளநோய் மருத்துவர்
2. கேளுணர்வு குறைபாடு/காது கேளாமை காது, மூக்கு, தொண்டை நோய்களை குணப்படுத்தும் துறையில் வல்லுநர்
3. தொழுநோயிலிருந்து குணமடைந்த நபர் இயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு அல்லது எலும்பு மருத்துவர் அல்லது தோல் மருத்துவர்
4. உடலுறுப்பு துண்டிக்கப்படாமல் வேறு வகையில் நடமாட இயலாமை அல்லது முழுமையாக, நிரந்தரமாக உடலுறுப்பு இயங்காமை இயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு அல்லது எலும்பு மருத்துவர்
5. மனநோய் உளநோய் மருத்துவர்
6. புரிந்து செயல்படும் ஆற்றல் குறைபாடு 12 வயதுக்கும் குறைந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் – குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவ நரம்பியல் மருத்துவர் அல்லது பெரியவர்களுக்கான உளநோய் மருத்துவர், 12 வயதுக்கும் அதிகமான வயதுடையவர்கள் – உளநோய் மருத்துவர்
7. பார்வைத் திறன் குறைபாடு கண் மருத்துவத் துறையில் வல்லுநர்
8. பார்வையின்மை கண் மருத்துவத் துறையில் வல்லுநர்
9. தற்பெருமைச் செயல் நிறமாலை குறைபாடு உளநோய் மருத்துவர் ஒருவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது நரம்பியல் மருத்துவர்
10. அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் தோல் நோய் மருத்துவர்/எலும்பியல் மருத்துவர்
11. நாட்பட்ட நரம்பியல் நிலைகள் நரம்பியல் மருத்துவர்/நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
12. குள்ளத்தன்மை எலும்பு நோய் மருத்துவர்
13. இரத்த ஒழுக்கு நோய் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவர்/ எலும்பு நோய் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்
14. காது கேளாமை, பார்வையின்மை உட்பட பல வகையான ஏலாமை தொடர்புடைய ஏலாமையை குணமாக்கும் வல்லுநர் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழு
15. பல வகையில் தோல் கடினமாதல் நரம்பியல் மருத்துவர்/எலும்பியல் மருத்துவர்
16. தசை நார் தேய்வு நரம்பியல் மருத்துவர்/எலும்பியல் மருத்துவர்
17. பார்க்கின்சன் நோய் நரம்பியல் மருத்துவர்
18. அரிவாள் செல் நோய் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவர்/ எலும்பியல் நோய் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்
19. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் – குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவம் நரம்பியல் மருத்துவர் அல்லது பெரியவர்களுக்கான மருத்துவர், 12 வயதுக்கும் அதிகமான வயதுடையவர்கள் – உளநோய் மருத்துவர்
20. பேச்சுத் திறன் மற்றும் மொழி கற்றல் குறைபாடுகள் காது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ துறையில் வல்லுநர்-நரம்பியல் மருத்துவர்
21. தலசீமியா இரத்த ஒழுக்கு நோய் மருத்துவர்/ எலும்பு நோய் மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவர்

தமிழ்நாடு அரசு ஆவணம் ....

Note: The footer tag is not supported in Internet Explorer 8 and earlier versions.